ரசிகர்கள் கொடுத்த “ப்ளாக் பஸ்டர்” பரிசு… பிறந்தநாளில் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

ரசிகர்கள் கொடுத்த “ப்ளாக் பஸ்டர்” பரிசு… பிறந்தநாளில் தனுஷ் நெகிழ்ச்சி பதிவு!

நட்சத்திர ஹீரோவாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது சன் பிக்சர் தயாரிப்பில் ராயன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். தனுஷின் 50வது திரைப்படமாக உருவாகியுள்ளது. மாபெரும் எதிர்பார்ப்பில் ஜூலை 26ம் தேதி வெளிவந்த இப்படம் உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ராயன் படத்தின் வெற்றி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாவது , “மக்கள், ப்ரீஸ் – மீடியா மற்றும் என்னுடைய துணையாக இருக்கும் தூண்கள் எனது ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது என்னுடைய சிறந்த ப்ளாக் பஸ்டர் பிறந்தநாள் பரிசு. ஓம் நமசிவா” என கூறி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.