சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிச்சர்ஸ் என்ற இத்திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாலும் ஒன்றிணைந்து நடிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது இருந்தது. இதனிடையே அவர் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படியான நேரத்தில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வராது. அதாவது, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் மகன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்துள்ளார். அவரை சமாதானம் செய்து நடிகர் ரஜினியே தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா இன்ஸ்டாவில் ஷேர் செய்ய போட்டோஸ் வைரலாகி வருகிறது.