மும்பையில் மிகப்பெரிய பங்களா வாங்கிய மாதவன் – எத்தனை கோடி தெரியுமா ?

மும்பையில் மிகப்பெரிய பங்களா வாங்கிய மாதவன் – எத்தனை கோடி தெரியுமா ?

நடிகர் மாதவன் சாக்லேட் பாயாகவும், ஹேண்ட்ஸம் ஹீரோவாகவும் வலம் வந்து தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார். இவர் தற்போது 54 வயதாகியும் இவரது மவுசு,மார்க்கெட்டும் இன்னும் கூட குறையவே இல்லை. கடைசியாக மாதவன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா ,மாறன்,இறுதிச்சுற்று போன்ற படங்களின் மூலம் மாஸ் காட்டி இருந்தார்.

தமிழில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான மாதவன் முதல் படத்தில் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார். இந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மும்பையிலே செட்டில் ஆகிவிட்டார். மும்பையில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் நடிகர் மாதவன் தற்போது மிகப்பெரிய அபார்ட்மெண்ட் ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கிறாராம்.

ஆம், நடிகர் மாதவன் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அபார்ட்மெண்டின் விலை ரூ. 17.5 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் மாதவன், புதிய வீடு, actor madhavan , apartment ,

actor-madhavan-buys-luxury-apartment-in-mumbai