சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி நட்சத்திர நடிகர் ரேஞ்சிற்கு பிரபலமானவர் தான் இர்பான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தனது மனைவியின் கருவில் இருக்கும் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று கண்டறிந்து வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இந்த விவகாரத்தில் இர்பானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சுகாதாரத்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை டெலிட் செய்தார். இந்த விஷயம் பெரிய பூதாகரமாக வெடித்தது.
அதையடுத்து இர்பான் தனது மனைவிக்கு மிகவும் பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்த்தார். இதையடுத்து அவருக்கு அழகிய பெண் குழந்தாய் பிறந்தது. இந்நிலையில் அன்பு மகளை அரவணைத்து தாலாட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதோ அந்த வீடியோ: