உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பின் அரக்கன், நடிப்பின் சிகரம் என ரசிகர்களால் போற்றப்பட கூடியவர் இவருக்கு கிட்டத்தட்ட 69 வயது ஆகியும் தற்போது வரை அவரது நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் நடிப்பு குறித்து பிரபல நடிகர் சுமன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, கமல் ஹாசன் ஒரு காதல் ஹீரோ. அவருடைய ஆடை அலங்காரம் அன்றைய இளைஞர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது. ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தார்.கமல் ஹாசன் ரொமான்ஸ் செய்தால் அது மிகவும் இயல்பாக இருக்கும்.
அப்படி இருந்து தன்னுடைய இமேஜை பாதிக்கும் கதாபாத்திரங்களில் கண்டித்திருக்கிறார். எங்களை போன்ற ஹீரோக்களால் அப்படி நடிக்க முடியாது. நடிப்பு என்பது கமல் ஹாசனுக்கு கடவுள் கொடுத்த வரம். கமல் ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் கூட காதல் காட்சியில் நடிப்பார். இது அனைவராலும் செய்யக்கூடிய விஷயம் அல்ல என்று சுமன் தெரிவித்துள்ளார்.