அர்ஜுனின் இரண்டாவது மகளின் காதலன்… விரைவில் அடுத்த கல்யாணம்!

அர்ஜுனின் இரண்டாவது மகளின் காதலன்… விரைவில் அடுத்த கல்யாணம்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவரின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யா – உமாபதி ராமைய்யாவின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வருகிறார். முதன் முதலில் யானை திரைப்படத்தில் நடித்து 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.அதை அடுத்து பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா. பெற்றோர்கள் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதையடுத்து ஐஸ்வர்யா – உமாபதியின் திருமணம் அண்மையில் படு கோலாகலமாக நடந்துள்ளது. அவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா தற்போது குடும்பத்துடன் இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் உடன் புது நபர் ஒருவரும் இருக்கிறார். அவர் தான் உங்க காதலரா என நெட்டிசன்கள் தற்போது கேட்டு வருகின்றனர். எனவே அர்ஜுன் வீட்டில் விரைவில் அடுத்த கல்யாணம் அரங்கேறும் என எதிர்பார்க்கலாம்.