பல கோடிகள் கொடுத்து அஜித் வாங்கிய புதிய கார்…. வைரலாகும் போட்டோஸ்!

பல கோடிகள் கொடுத்து அஜித் வாங்கிய புதிய கார்…. வைரலாகும் போட்டோஸ்!

நட்சத்திர நடிகர் அந்தஸ்தை பிடித்துள்ள நடிகர் அஜித் முழுக்க முழுக்க தனது உழைப்பால் மட்டும் முன்னணி நடிகராக உச்ச அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் வளர்ந்து வந்த காலத்தில் பல இடங்களில் அவமானப்பட்டு அசிங்கப்பட்டு அதான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்.

இன்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் அஜித் நடிப்பை தாண்டி தனக்கு மிகுந்த ஆர்வம் மிக்க கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல வீர விளையாட்டு மற்றும் சாகசங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். குறிப்பாக அவருக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம். பலகோடிகள் மதிப்புள்ள பல்வேறு வகையான கார்கள் , லக்ஸரி பைக்குகள் உள்ளிட்டவற்றை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அஜித் ferrari sf90 stradale என்ற புதிய காரை பல கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். கார் உடன் அஜித் இருக்கும் போட்டோவும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அந்த காரின் ஆன் ரோடு விலை சுமார் 9 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.