பிரபல தொகுப்பாளினியாக டிடி’யை தொகுப்பாளர் ரமேஷ் நல்லாயன் காதலித்துள்ளார். அது குறித்து கூறிய அவர், நான் டிடியை ஒருதலையாக காதலித்தேன். டிடிக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர் இன்ஸ்ப்ரேஷனாக இருந்து பின் கிரஷ்-ஆக மாறினார்.
என் காதலை அவரிடம் சொல்ல சென்ற நேரத்தில் தான் டிடி-யின் நிச்சயதார்த்தம் பற்றி கூறுகிறார்கள். அப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, வேண்டாம் என்று நினைத்து கடைசி வரை சொல்லவில்லை. அதன் பின்பு டிடி திருமணமாகி விவாகரத்தான தொடர்பான செய்திகள் எனக்கு தெரியவந்தது. அந்த தகவல் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.
அதன் பின்னர் மீண்டும் டிடி மறுமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறாரா என்பதை குறித்து தெரிந்துகொள்ள விரும்பினேன். அதனால் காபி வித் காதல் படப்பிடிப்பில் டிடியிடம் பேசினேன். ஆனால் அவர் அதை பற்றி பேச தயாராக இல்லை என்று ரமேஷ் நல்லாயன் தெரிவித்துள்ளார். டிடியின் இந்த முடிவு வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.