வட நட்டில் நடக்கும் மிகப் பெரிய பிரபலங்களின் நிகழ்வுகளில், கலந்து கொள்ளும் நபர் ரஜனி. சில வேளைகளில் அம்பானி அவரை மட்டுமே அழைப்பதும் உண்டு. ஆனால் எதற்கும் நோ சொல்லாமல், சென்றுவிடுவார் ரஜனி என்று தான் பலரும் நினைத்துக்கொண்டு இருன்க்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் ஒவ்வொரு முறை செல்லும் போதும் குறைந்த பட்சம் 2 கோடி ரூபா பணமாக இல்லையேல் அதற்கு நிகரான பரிசை அவர் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அம்பானியின் 2வது மகனின் திருமணத்திற்குச் சென்ற ரஜனிக்கு, அம்பானியின் மகன் தங்கத்திலான கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதன் விலை மட்டும் 2 கோடியே 10 லட்சம் என்கிறார்கள். இது போல எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் , பணம் இல்லையேல் பரிசுகளை பெற்று வருகிறார் என்று விடையம் அறிந்த வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.