கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் படு தோல்வி அடைந்து நஷ்டமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது. ஆனால், உண்மையில் இந்த படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
அது எப்படி என்றால், “இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய இரு திரைப்படங்களின் மொத்த பட்ஜெட் ரூ. 500 கோடி. இதில் ஒரு பாகத்திற்கு ரூ. 250 கோடி செலவு என வைத்துக்கொள்ளலாம். இதில் 90% சதவீதம் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டது. கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வரை போட்ட காசை எடுத்துவிட்டார்கள்.
இதுதவிர, தமிழ்நாடு உரிமை, கேரளா உரிமை, ஆந்திரா உரிமை, இந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டி உரிமை மற்றும் ஆடியோ உரிமை என பல இருக்கிறது. இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் லைகா நிறுவனத்திற்கு “இந்தியன் 2 ” திரைப்படம் மிகவும் லாபகரமான படம் தான் என பத்திரிகையாளர் பிஸ்மி தெள்ளத்தெளிவாக கூறியிருகிறார்.