அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார் – வைரல் வீடியோ!

அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட சூப்பர் ஸ்டார் – வைரல் வீடியோ!

இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல்வேறு துறை நட்சத்திர பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த விஐபிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றார்கள்.

பல கோடி பட்ஜெட் பொருள் செலவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல மாதங்களாக தொடர்ச்சியாக பல விழாக்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றதில் இதில் தமிழ் திறையுலகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டார்கள். குறிப்பாக சூர்யா, ஜோதிகா, நயன்தாரா, ரஜினிகாந்த், இயக்குனர் அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள் சௌந்தர்யா குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டார். அப்போது கல்யாண வீட்டில் சூப்பர் ஸ்டார் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.