தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். பள்ளி பருவத்திலேயே இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் பல வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அன்வி அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தற்போது 4 வயதாகிறது. திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் செய்த விட்டார்கள். இவர்களது பிரிவு செய்தி பேரதிர்ச்சியாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.
இவர்கள் இருவரும் மனம்மாறி ஈண்டும் சேருவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் சைந்தவி. ஆம், சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைந்தவி பிரகாஷ் என்கிற பெயரை “சைந்தவி” என மாற்றியுள்ளார். இருவரும் சேர்வார்கள் என எதிர்பார்த்த வேளையில், சைந்தவியின் இந்த அதிரடி எக்ஷன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.