தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவான சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து சர்க்கார் மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து தனது வேறொரு ரூபத்தை வெளி காட்டினார்.
வரலட்சுமி நடிப்பு குறிப்பாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். இதனிடையே மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 வருடங்களாக காதலித்து தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் .
அதையடுத்து மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் தாய்லாந்தில் வரலட்சுமியின் திருமணம் தற்போது நடந்து முடிந்து இருகிறது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.