“””Keir Starmer says recognition of the state of Palestine is an ‘undeniable right’ as part of the peace process in the Middle East as the new Prime Minister tells his Israeli counterpart Benjamin Netanyahu there is a ‘clear and urgent’ need for a ceasefire “””
பிரிட்டனில் நடந்து முடிந்த தேர்தலில், லேபர் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சியை அமைத்துள்ளது. இது நாள் வரை ஆண்டு வந்த கான்சர் வேட்டிவ் கட்சி, கொண்டிருந்த கொள்கைகளுக்கு முரணான பல கொள்கைகளை லேபர் கட்சி கடைப்பிடிக்கிறது. குறிப்பாக பாலஸ்தீன விடுதலை அமைப்பை இது நாள் வரை பிரித்தானியா பயங்கரவாதிகள் என்று கூறி வந்தது. ஆனால் லேபர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர், அதனை நிராகரித்துள்ளதோடு.
பாலஸ்தீன தேசத்தை தான் அங்கிகரிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதனால் உடனே போரை நிறுத்துமாறு அவர் இஸ்ரேல் அதிபர் நித்தின் யாகூவுக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் பிரித்தானியா இனி ஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப் போவது இல்லை. இதனை அமெரிக்காவும் ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, மற்றும் பிரித்தானியா ஆகிய 2 நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்காது போனால், இஸ்ரேலால் தாக்குதல் நடத்த முடியாத நிலை தோன்றும்.
மேலும் பிரித்தானியா பாலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கிகரித்தால், ஐ.நாவின் பாதுகாப்பு படை அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, போர் நிறுத்தம் ஒன்று உடனடியாக வர வாய்ப்புகள் உள்ளது. இதேபோல இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு நீதி கிடைக்க, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, தமிழர் தரப்பு கியர் ஸ்டாமரை அணுகுவது நல்லது.