UPdate UK: 4 am : லண்டன் காலை 4 மணி நிலவரப்படி , லேபர் கட்சி 237 இடங்களில் வெற்றியடைந்துள்ளார்கள். கான்சர் வேட்டிவ் கட்சி வெறும் 44 இடங்களையும் லிபரல் கட்சி 23 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
EXIT POLL என்று அழைக்கப்படும் கருத்துக் கணிப்பு(பிரித்தானியாவில் உள்ளது) இது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வாக்குகளை செலுத்திவிட்டு வெளியே வரும் மக்களிடம் இருந்து அறியப்பட்ட தகவலின் அடிப்படையில், 410 இடங்களில் லேபர் கட்சி வெல்லும் என்றும், வெறும் 130 இடங்களில் தான் கான்சர் வேட்டிவ் கட்சி வெல்லும் என்றும் கூறப்படுகிறது. 3 தமிழ் வேட்ப்பாளர்கள் போட்டி இடுகிறார்கள். இவர்களின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்த முடிவுகள் என் நேரமானாலும் வெளியாக வாப்புகள் உள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்ட(தேர்தல் இறுதி முடிவுகள்) அடிப்படையில், 88 இடங்களில் லேபர் கட்சி வெற்றியடைந்துள்ளது. 10 இடங்களில் கான்சர் வேட்டிவ் கட்சி வென்றுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் 650 ஆசனங்கள் உள்ளது. இதில் 410 ஆசனங்களை லேபர் கட்சி கைப்பற்றி, பெருவாரியான வெற்றிபெறும் என்பது உறுதியாகியுள்ளது,