மார்க்கெட் இல்லன்னா வந்ததுக்கு இப்படி ஒரு அவமானமா?

மார்க்கெட் இல்லன்னா வந்ததுக்கு இப்படி ஒரு அவமானமா?

நம்பர் ஒன் இடத்தில் இருந்த நயன்தாரா திருமணத்திற்கு பிறகு டல் அடித்துவிட்டார். பாலிவுட்டில் அவர் நடித்த ஜவான் படம் தான் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் நயன்தாராவுக்கு போகவில்லை. அன்னபூரணி மட்டும் ஓரளவு வசூலை பெற்றது.

மேலும் நயன்தாராவின் மார்க்கெட் சரியா தொடங்கிய நிலையில் மற்ற நடிகைகள் இப்போது அவரது இடத்தை பிடிக்க போட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் இதுவரை எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று வீம்பாக இருக்கும் நயன்தாரா கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வந்திருந்தார்.

இவருக்கு யார் மூலமாக அழைப்பு சென்றது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இதில் கேலி கூத்தாக மாறியது என்னவென்றால் ஸ்டேடியம் உள்ளே வரை நயன்தாராவை கார் வைத்து அழைத்து வர யோசித்து இருக்கின்றனர். அதைப் பார்ப்பதற்கு ஷேர் ஆட்டோவில் போகிற மாதிரி தான் இருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் இப்போது வெளியாகி நயன்தாராவை ட்ரோல் செய்து வருகிறார்கள். மார்க்கெட் இல்லையே என்று இப்படி வந்ததற்கு அசிங்கப்படுத்தி விட்டார்களே என்று நயன்தாரா புலம்பி கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே ஒன்று, இரண்டு பட வாய்ப்புகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் இன்னும் அடி வாங்க வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனாலும் நயன்தாரா சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது என்பதால் தான் இப்போதே நிறைய தொழில்களில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்.