தமிழ் படங்களில் வில்லனாக நடித்து பிரபலம் ஆனவர் பஹத் பாசில். இவர் மலையாள சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல்வேறு படங்களில் வில்லன் ரோலில் நடித்து மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக பெரும் புகழ்பெற்றார்.
இவரது வில்லத்தனமான நடிப்புக்கு பெருவாரியான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனிடையே பஹத், ADHD எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். Adhd என்பது நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடு, இது இருப்பவர்கள் அதிக மறதி கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த நோயின் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Attention-deficit/Hyperactivity disorder இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரொம்ப ஹைப்பராக இருப்பார்கள். அவர்களால் ஒரு இடத்தில இருந்து சரியா வேலை செய்ய முடியாது.
அமைதியாக ஒரே இடத்தில் வேலை செய்ய முடியாது. மேலும் மறதி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயில் இருந்து குணமடைய தியானம், மனநல தெரப்பிகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.