உக்ரைன் நாட்டின் T-64 ரக கவச வாகனம் ஒன்றை, களவாடிக் கொண்டு, அதனை ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளார் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவச் சிப்பாய். மக்ஸின் என்ற 36 வயது இளைஞர் கடந்த 18 மாதங்களாக உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய, 101 படையணி, 59வது படையணி மற்றும் 119வது படையணிகள், ரஷ்யாவின் கடும் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தது. இருப்பினும் அந்த தாக்குதலில் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மக்ஸின் மட்டும் அதிஷ்டவசமாக தப்பி இருந்தார்.
அவர் தொடர்ந்தும் உக்ரைன் ராணுவத்தில் இருந்துகொண்டு, உக்ரைன் நிலைகளை ரஷ்யாவுக்கு காட்டிக் கொடுத்த வண்ணமே இருந்துள்ளார். இதனால் உக்ரைன் ராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடைசியாக நேற்று முன் தினம் மக்ஸின் உக்ரைன் நாட்டின் T 64 ரக அதி நவீன கவச வாகனம் ஒன்றை களவாடி, அதனை ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளார். இரவு வேளை என்பதனால் ரஷ்ய ராணுவம் நைட் விஷன் கமரா மூலம் இதனை அவதானித்துள்ளார்கள்.
இருந்தாலும் இவர் ஒரு எட்டப்பன் என்பது, ரஷ்ய ராணுவத்திற்கே தெரியாது. கவச வாகனம் ரஷ்ய கட்டுப்பாட்டு எல்லை நோக்கி எந்த ஒரு தாக்குதலையும் நடத்தாமல் வந்ததால், அதனை அவர்கள் தாக்கவில்லை. மாறாக அதில் உள்ள நபர்களை சரணடையும் படி ரஷ்ய ராணுவம் பணித்தது. ஆனால் அதில் இருந்து ஒரே ஒரு நபர் மட்டும் கீழே இறங்கி, முட்டிக்கால் போட்டு கைகளை மேலே உயர்த்தியுள்ளார். அவரை ரஷ்ய ராணுவம் உடனே கைது செய்துவிட்டது.
இதேவேளை தாம் உக்ரைன் ராணுவத்தையும் அவர்களது கவச வாகனத்தையும் கைப்பற்றி விட்டோம் என்று, ரஷ்ய ராணுவத்தினர் சிலர் இந்த வீடியோவை கசிய விட்டுவிட்டார்கள். ஆனால் உண்மையில் அவர் ரஷ்ய உளவாளி என்பது பின்னர் தான் தெரிந்துள்ளது. இருப்பினும் வீடியோவில் உள்ள நபரை, உக்ரைன் உளவுப் பிரிவு உடனே அடையாளம் கண்டு பிடித்துவிட்டது. அத்தோடு ரஷ்யாவின் பல உளவாளிகள் தற்போது உக்ரைன் படையணியில் இருக்கிறார்கள் என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளதால். உக்ரைன் ராணுவம் அலேட் ஆகியுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குறித்த உளவாளி, சில காலம் போலந்து நாட்டில் தங்கி இருந்துள்ளார். அதன் பின்னர் போர் ஆரம்பித்தவேளை வந்து உக்ரைன் படையில் இணைந்துள்ளார். எனவே போலந்தில் அவர் தங்கி இருந்தவேளை, ரஷ்ய உளவுப் பிரிவினர் அவரை சந்தித்து இருக்கவேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால், போலந்து அரசும் அலேட் ஆகியுள்ளது. போலந்தில் இயங்கும் ரஷ்ய உளவுப் பிரிவினரை, தேட அன் நாட்டு அரசு பெரும் நடவடிக்கையில் இறங்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது.