தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கலைஞர் 100 விழா இன்று 6 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடந்து வருகிறது.
,இன்று மாலை 4மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, ”பராசக்தி படத்தில் சைக்கில் ரிக்ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். நீ இன்னுமா ஆட்சசிக்கு வந்து மாத்திக்காட்டேன். என காவலர் பேசும் வசனம் வரும். பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வந்து மனிதன் ரிக்ஷாவை இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர். சினிமாவை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்ததலாம் எனும் டிரெண்டு செட் செய்தவர் கலைஞர் ”என்று தெரிவித்துள்ளார்.