பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான கங்கனாராவத் ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு மிகவும் போல்டான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். திரைப்படங்களில் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் மட்டும் மிக தைரியமான கதாபாத்திரமாக இருந்துவிடாமல் தான் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் தான் மிகவும் தைரியமான பெண் என்பதை அவ்வப்போது நிரூபித்து காட்டி வருகிறார்.
குறிப்பாக பாலிவுட்டில் நடக்கும் வாரிசு அரசியல் மற்றும் நெப்போடிசம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை கங்கனா ரணாவத். அவர் குறிப்பாக அந்த பாலிவுட் சினிமாவில் பேக்ரவுண்ட் இல்லாமல் திறமையோடு சினிமாவிற்குள் நுழையும் பல்வேறு கலைஞர்கள் நசுக்கப்படுவதை பற்றி கங்கனா ரனாவத் பல பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
இதனால் அவர் பல பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். குறிப்பாக நட்சத்திர வீட்டு வாரிசு நடிகர் நடிகைகளை அவர் கிழித்தெறிந்து இருக்கிறார் என்று சொல்லலாம். பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் பல்வேறு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியும் அவர் ஏன் மரணித்தார் என்பது கூறி என்பது பற்றிய பல விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்தவர் கங்கனா ரனாவத்.
அது மட்டுமில்லாமல் அரசியல் சார்ந்த விஷயங்களையும் வெளிப்படையாக கருத்து பேசக்கூடியவர். இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாள படமாக தமிழில் அமைந்தது. அதை அடுத்து கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இருந்தார்.
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை கங்கனா பிஜேபிக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறார் அதற்காக அவரின் சொத்து மதிப்பு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, மொத்த சொத்து மதிப்பு ரூ 91 கோடி என்றும், இதில் அசையும் சொத்து 28.7 கோடி, அசையா சொத்து 62.9 கோடி என கணக்கு காண்பித்துள்ளார்.
அதோடு தனக்கு 17.38 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கங்கனா அதில் தெரிவித்துள்ளார். இதோடு 3.91 கோடி மதிப்பில் ஒரு BMW மற்றும் 2 பென்ஸ் கார்களை வைத்துள்ளதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.