கலைஞர் நூற்றாண்டு விழா கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை தயாரிப்பாளர் சங்கம் நடத்தினாலும், இதன் பின்புலத்தில் திமுக நடத்தும் விழாவாக தான் பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலக நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் திரையுலகில் சார்பாக பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் டாப் நடிகர்கள் ஒரு சில பேர் வசமாக சிக்கிக்கொண்டனர்.
ஏனென்றால் இவர்கள் எல்லாம் சமீபத்தில் மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு வராதவர்கள். அவர்கள் இப்போது கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு மட்டும் வந்தால், ரசிகர்கள் கிழித்து தொங்கவிட்டு விடுவார்களே என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
உதயநிதியை பகைத்துக் கொள்ள முடியாமல் திணறும் நடிகர்கள்
நடிகர் சூர்யா, அஜித், தனுஷ், சிம்பு, விஷால், கார்த்தி உள்ளிட்டோரெல்லாம் வெவ்வேறு காரணத்திற்காக மறைந்த கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. இவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இருந்தாலும் இப்போது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் டாப் நடிகர்களின் படங்களை விநியோகம் செய்கிறது. அப்படி இருக்கும் போது அவரை பகைத்துக் கொண்டால், இங்கே சர்வே பண்ண முடியாது என்று நிச்சயம் இந்த நடிகர்கள் எல்லாம் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு போக தான் பார்ப்பார்கள்.