பிரம்மாண்டம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி , செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
இந்தியன் படத்தில் இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடித்திருந்த கமலஹாசன் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகவும் கமல்ஹாசன் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்த படமாக அப்போதே பார்க்கப்பட்டது. இப்படம் அந்த காலத்தில் அதாவது 1996 ஆம் ஆண்டு வெளிவந்து கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.
அந்த காலத்தில் அவ்வளவு பெரிய வசூல் ஈட்டிய படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தியன் சினிமாவில் சரித்திரம் படைத்தது “இந்தியன்” திரைப்படம். அப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் எட்டியிருப்பதை லைக்கா நிறுவனம் #28YearsOfINDIAN என்ற ஹேஸ்டேக் போட்டு கொண்டாடி வருகிறது. அத்துடன், அந்த படத்திற்காக கமல் ஹாசனுக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள். விரைவில் “இந்தியன் 2 திரைப்படம்”ரிலீசுக்கு தயாராக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The iconic role that earned our Ulaganaygan many accolades! 🏅 Now, it's time to call back the legend, Senapathy! 🤞🏻 #ComeBackIndian 🫡🇮🇳#Indian 🇮🇳 #28YearsOfINDIAN #28YearsOfSenapathy #28YearsOfPanIndiaBBIndian@ikamalhaasan @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/26Kc0Fgyxi
— Lyca Productions (@LycaProductions) May 9, 2024