திரைப்படங்களின் நடிக்கும் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக இடம் பிடிப்பார்கள். அவர்கள் நடித்தாலே படம் சூப்பராக இருக்கும். அவர்களது கெமிஸ்ட்ரி படங்களில் பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும் என சொல்லும் அளவுக்கு ஒரு சில ஜோடிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
அப்படித்தான் விஜய் திரிஷா இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த படத்திற்கு மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம் என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி மற்றும் சமீபத்தில் வெளிவந்த லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு தற்போது அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 80 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. அது குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய த்ரிஷாவிடம் விஜய் இடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் எது? என கேட்டதற்கு விஜய்யிடம் பிடிக்காத விஷயம் ஒன்னே ஒன்னு தான் இருக்கு. அவரது அமைதி எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் பெரும்பாலும் ரொம்ப அமைதியா இருப்பாரு.
ஷூட்டிங் ஸ்பாட்ல அவரோட ஷாட் நடித்துவிட்டு ஒரு சேர் ஒன்று போட்டு உட்கார்ந்துட்டு சுவரையே அமர்ந்து அமைதியா பார்த்துகிட்டே இருப்பாரு. அந்த சமயம் அவரோட அமைதி எனக்கு சுத்தமா பிடிக்காது. நம்ம ஏதோ தப்பு செஞ்சிட்டோமோ அப்படின்னு தோணும் அளவுக்கு அவர் அவ்வளவு அமைதியா இருப்பாரு. அந்த விஷயம் அவரிடம் எனக்கு சுத்தமாக பிடிக்காது என திரிஷா ஓப்பன் ஆக கூறியிருக்கிறார்.