ஆசை யார விட்டுச்சு’, நடிகையாக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிய ஐந்து நடிகைகள் பேராசையில் தயாரிப்பாளர்களாக மாறி மொத்த சொத்துக்களையும் இழந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வளர்ப்பு பையனால் நஷ்டப்பட்டு மீள முடியாமல் ஆச்சி மனோரமா தவித்திருக்கிறார்.
அமலாபால்: நடிகை அமலாபால் தடயவியல் நிபுணராக நடித்துள்ள கடாவர் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலும் வெளியிட்டார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் பெயிலியர் ஆனது. முன்பு டாப் ஹீரோயின் ஆக ரவுண்டு கட்டிய அமலாபாலுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததும் தயாரிப்பாளராக மாறி, கடைசியில் மொக்கை வாங்கியது தான் மிச்சம்.
ரம்பா: தொடையழகியாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகையான ரம்பா, டாப் ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு உச்சத்தில் இருந்தார். தயாரிப்பாளராக வேண்டும் என்ற இவருடைய பேராசையால் மொத்த சோழியும் முடிஞ்சு. 2003 ஆம் ஆண்டு சக்தி பரமேஸ் இயக்கத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா போன்ற மூன்று டாப் ஹீரோயின்கள் இணைந்து நடித்த படம் தான் த்ரீ ரோசஸ். இந்த படத்தை ரம்பா தான் தயாரித்தார். அந்த சமயத்தில் ரம்பாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால், தனது அண்ணன் வாசுவின் ஆலோசனையின் படி த்ரீ ரோசஸ் படத்தை தயாரிக்க முன் வந்தார். இந்த படத்திற்கு ஏராளமான கடன் பெற்று, அதை திரும்பித் தர முடியாமல் அவதிப்பட்ட ரம்பா, அதன் பின் சினிமாவை விட்டு காணாமல் போனார்.
ராதிகா: ஒரு நடிகை சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ஒரே மார்க்கெட்டை தட்டி தூக்கினார் என்றால், அது நடிகை ராதிகா மட்டுமே. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களையும் சீரியல்களையும் ராடன் மீடியா என்னும் பெயரில் தயாரித்து வருகிறார். 1985ல் இவர் தயாரித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ அதன் தொடர்ச்சியாக ஜித்தன், மாரி போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார். இதில் ஜித்தன் படம் அவருக்கு படு தோல்வியாக அமைந்தது.
சாவித்திரி: நடிகையர் திலகம் எனப் போற்றப்பட்ட நடிகை சாவித்ரி 50, 60களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டியவர். இவருடைய கடைசி காலத்தில் கடனில் சிக்கி கஷ்டப்பட்டு இறந்தார். கதாநாயகிகளில் முதன்முதலாக கார் வாங்கி, வீட்டில் நீச்சல் குளத்தை கட்டி திரையுலகை திரும்பி பார்த்த சாவித்திரிகா இந்த நிலைமை! என்று பலரும் வருத்தப்பட்டனர். ஆனால் இதற்கு காரணம் சாவித்திரி தயாரிப்பாளரானது தான். நடிகையாக சம்பாதித்த பணத்தை எல்லாம் சாவித்திரி தன்னுடைய சொந்த தயாரிப்பில் பிராப்தம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.
ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதுவரை எப்போதுமே எட்டிப் பார்த்து விட்டு சென்று கொண்டிருந்த விதி, சாவித்திரியின் வாழ்க்கையில் சமணம் போட்டு உட்கார்ந்து விட்டது. அதன் பிறகு, கூட இருந்தவர்களின் சதி செயலால் அடுத்தடுத்து படங்களை தயாரித்து மொத்த சொத்தையும் இழந்து தங்கி இருந்த வீடு, வாசலை எல்லாம் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
மனோரமா: இன்று வரை தமிழ் திரையுலகில் யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இடம் என்றால் அது ஆச்சி மனோரமா உடையது தான். காமெடி நடிகையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1985ல் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனையை படைத்த இவர், சேர்த்து வைத்த மொத்த சொத்தையும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசையில் இழந்துவிட்டார்.
இவர் கண்மூடித்தனமாக ப்ரொடியூசர் ஆகுவதற்கு காரணம் அவருடைய மகன் பூபதி தான். இவரும் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி, அதன் பின் சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் மனோரமா ‘தூரத்து சொந்தம்’ என்ற படத்தை தயாரித்தார். இதற்காக கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்து சம்பாதித்தத்தை எல்லாம் பையன் சொல்றான்னு கண்மூடித்தனமாக நம்பி தயாரிப்பாளராக மாறி மொத்தத்தையும் இழந்தார்.