ரஷ்யாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் பெரும் நிலப்பரப்பாக இருப்பது அலாஸ்கா. இது வெறும் பாறைகள் மற்றும் பனிக்கட்டியால் ஆன பூமி. அங்கே மக்கள் வசிப்பது என்பது, சாத்தியம் இல்லை. இந்த மாபெரும் நிலப்பரப்பு ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தம். ஆனால் 1867ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த, அன்ரூ ஜோன்சன், இந்த நிலப்பகுதியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கினார். இதற்காக அமெரிக்கா வெறும் 7.2 மில்லியன் டாலர்களை கொடுத்தது. இதுவே ரஷ்யா செய்த மிகப் பெரிய வரலாற்றுத் தவறு என்று இன்று வரை வர்ணிக்கப்படுகிறது.
சற்று முன்னர் அந்தப் பகுதிக்கு அருகாமையில் ரஷ்யாவின் TU95MS என்ற, அணு குண்டை ஏந்திச் செல்லும் 2 விமானங்கள் சென்றுள்ளது. ஆனால் அதே நேரம் அந்த இடத்தில் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்காவின் 2 போர் விமானங்கள், அந்த இடத்தில் இருக்கும் என்று ரஷ்ய விமானிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இரு நாட்டு விமானங்கள் ஒன்றை ஒன்று நேருக்கு நேராக சந்திக்கவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா வான் படை ஏன் அலாஸ்கா பகுதிக்கு வந்தது என்பது இதுவரை தெளிவாகவில்லை. இருப்பினும் அமெரிக்கா, போர் விமானங்கள் அந்த 2 ரஷ்ய விமானங்களையும் தமது பகுதியில் இருந்து விரட்டியடித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.