பிரமாண்டமாய் உருவாகப்போகும் ரஜினியின் Biopic – இயக்குனர் யார்?

பிரமாண்டமாய் உருவாகப்போகும் ரஜினியின் Biopic – இயக்குனர் யார்?

சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 73 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் இன்றும் ஹவுஸ் குறையாமல் அதே ஹீரோயிசத்தை படங்களில் காட்டி வருகிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் ரஜினியின் பயோ பிக் திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கும் வேளை மும்முரம் காட்டி வருகிறார்களாம். ஆம் இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சுஜித் நாடியாவாலா தான் தயாரிக்கப் போகிறார் .

இந்த படத்தின் முழு ஸ்கிரிப்டும் தற்போது முடிவடைந்து விட்டு அடுத்த கட்ட பணிகள் தற்போது மும்முரமாக துவங்கியிருக்கிறதாம். எனவே ரஜினியின் பயோட்டிக் படத்தை யார் இயக்கப்போகிறார்கள்? நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.