யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள 3 உணவங்களை சீல் வைத்து மூடியுள்ளார், சஞ்ஜீவன். திருநெல்வேலி சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்ட இந்த 3 உணவங்களில் பல திருத்தவேலைகள் இருப்பதாக கூறப்பட்டது. இது உணவுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இருந்தது. சுகாதார சீர் கேடு உருவாகும் நிலை காணப்பட்டதால். அதனை உடனே திருத்துமாறு பணிக்கப்பட்டது. அதற்கான அவகாசமும் கொடுக்கப்பட்ட நிலையில்.
குறித்த 3 உணவங்களும் இதனைக் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் நீதிமன்ற அனுமதியைப் பெற்ற திருநெல்வேலி சுகாதார பரிசோதகர் சஞ்ஜீவன், கடைகளை சீல் வைத்து மூடியுள்ளார். மேலும் 3 உணவங்களும் மொத்தமாக சேர்த்து, 2 லட்சத்தி 75,000 ரூபாவை தண்டப் பணமாக கட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழில் தற்போது மூலைக்கு மூலை முளைத்துள்ள இதுபோன்ற பல உணவங்களில் பல சுகாதார சீர்கோடுகள் இருந்து வருகிறது. அவர்கள் சுகாதார நிலைய அதிகாரிகள் சொல்வதையும் காதில் கேட்ப்பதே இல்லை. இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கினாலே ஒளிய இவர்களுக்கு இவர்கள் பாஷையில் தான் பேசவேண்டி உள்ளது.