விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிஜே பிரியங்கா இவர் அந்த தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் ஃபேவரட் ஆங்கராக அனைவரது மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
கலகலப்பான பேச்சு யாரையும் புண்படுத்தாத மனம் என வெகுளித்தனமான தனது கேரக்டர் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் இடம் புகுந்து விட்டார் பிரியங்கா. குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், கிட்சன் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆப் தி டான்ஸ், கனெக்ஷன் , அச்சம் தவிர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் 6 7 8 9, ஸ்டார் மியூசிக் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக விஜய் டிவி சேர் போட்டு அமர்ந்து விட்டார்,.
இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனது நெருங்கிய நண்பரான பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்போது சிங்கிள் வாழ்க்கை தனிமையில் ஜாலியாக வாழ்ந்து வரும் பிரியங்கா தனது 32 ஆவது பிறந்த நாளை பீச்சில் கொண்டாடியுள்ளார். மனசுக்கு நெருக்கமான மகிழ்ச்சியைத் தரும் கடற்கரையில் அவர் அலைகளின் நடுவே சேர் போட்டு உட்கார்ந்து மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரது வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.