சற்று முன்னர் பல்டிக் கடலில்(ரஷ்யாவுக்கு அருகாமையில் உள்ள கடல் பகுதி) மேல் பறந்துகொண்டு இருந்த 2 பின்லாந்து விமானங்கள், தமது கருவிகளின் பயன்பாட்டை இழந்துள்ளது. பல எலக்ரானிக் சாதனங்கள் வேலை செய்யாமல் போனதோடு, GPS கருவிகளும் செயல் இழந்தது. இது ஒரு பயணிகள் விமானம் ஆகும். இதனால் குறித்த 2 பின்லாந்து விமானங்களும் உடனே பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்த ஒரு பகுதில் பறந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு ஏற்படுவது இல்லை. ஆனால் சமீப காலமாக ரஷ்யாவின் கடல் எல்லையில் அல்லது அருகாமையில் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டால், இவ்வாறு எலக்ரானிக் சாதனங்கள் செயல் இழக்கிறது. ரஷ்யா அதி சக்தி வாய்ந்த ஜாமர்கள் மற்றும், விமானத்தின் இன்ரர் நெட்டை பாவித்து, ஹக் செய்யும் ஒரு புதிய தொழில் நுட்ப்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது.
இதனைப் பாவித்து ராணுவ விமானங்கள் தொடக்கம், பயணிகள் விமானங்கள் வரை, அனைத்து விமானங்களையும் சில நொடிகளில் ஹக் செய்கிறார்கள். இல்லையேல் எலக்ரானிக் சாதனக்களை செயல் இழக்கச் செய்கிறார்கள். இதனூடாக ரஷ்யா, உலக நாடுகள் அனைத்தையும் ஒரு வகையில் மிரட்டியுள்ளது. வெகு சீக்கிரத்தில் , ரஷ்ய கடலுக்கு அருகே பறப்பது ஆபத்து என்று கருதி பல விமானங்கள் வேறு வழியை பின் பற்ற நேரிடும். இது ஒரு வகையில் ரஷ்யாவுக்கு வெற்றி என்று தான் சொல்லவேண்டும். ஏன் எனில் இனி வேவு பார்க்கும் விமானங்கள் கூட ரஷ்யாவுக்கு அருகே செல்ல தயக்கம் காட்ட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
Source : https://www.dailymail.co.uk/news/article-13361885/Two-Finnish-passenger-jets-forced-turn-Russia-GPS-jamming-Baltic-nations-warn-Moscows-hostile-actions-risking-air-disaster.html