தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆன விஜய் தற்போது முன்னணி நடிகராக மார்க்கெட் பிடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்பொழுது கோட் என்னும் திரைப்படத்தில் மும்முறமாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் .
இதனிடையே அவர் அரசியலில் தடம் பதித்து அரசியலில் முழுமூச்சாக இறங்கவும் காத்திருக்கிறார். இப்படியான நேரத்தில் விஜய் குறித்த எந்த ஒரு செய்தி வெளியானாலும் அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிடுகிறது. ஆம் தற்போது விஜயின் மாமனார் மாமியாரின் புகைப்படம் ஒன்று தான் சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாக அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
விஜய் தன்னுடைய தீவிர ரசிகையான இலங்கையை சேர்ந்த லண்டன் வாசியான சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக அதில் விஜய்யின் மாமனார் மாமியார் போட்டோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் விஜய்யின் மாமனார் பார்ப்பதற்கு அப்படியே தெலுங்கு சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆன முரளி ஷர்மா போன்ற இருப்பதாக பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். ஒரு சிலர் இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே என்ன விஜய்யின் மாமனார் நடிகர் முரளி சர்மாவா என செம ஷாக் ஆகி பின்னர் படித்து தெரிந்து தெளிவாகியுள்ளனர். இந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது