அமெரிக்காவின் அதி நவீன கவச வாகனங்களில் ஒன்றான, ஏபிரம்-M1A2 டாங்கிகளை கள முனையில் இருந்து உக்ரைன் பின் நகர்த்தியுள்ளது. ஒவ்வொரு டாங்கிகளும் சுமார் 10M மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவை ரஷ்ய மற்றும் உக்ரைன் எல்லையில்(கிவ்) நிறுத்தப்பட்டு இருந்தது. 31 டாங்கிகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி இருந்த நிலையில். இவற்றில் 5 டாங்கிகளை ரஷ்யா அழித்துள்ளது.
ஏவுகணை தாக்க வந்தால் கூட அதனை, துல்லியமாக தாக்கி அழிக்க வல்ல இந்த டாங்கிகள். சிறிய ட்ரோன்களை(ஆளில்லா விமானங்களை) கண்டறிவதில் சிரமத்தை எதிர்நோக்குகிறது. இதனை அறிந்துகொண்ட ரஷ்யா, சிறிய ரக ட்ரோன்களை அனுப்பி, அதில், வெடி மருந்தை நிரப்பி இந்த ஏபிரம் டாங்கிகளை தாக்கி. 5 டாங்கிகளை அழித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த டாங்கிகளை கள முனையில் வைத்திருக்க வேண்டாம் என்று அமெரிக்க புலனாய்வு அறிவுறுத்திய நிலையில்.
உக்ரைன் இந்த டாங்கிகளை கள முனையில் இருந்து அகற்றியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறித்த டாங்கிகளில் மேலதிக சாதனங்களை பொருத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதனை தரம் உயர்த்திய பின்னரே, களத்தில் இறக்குவது என்று அமெரிக்கா திட்டம் போட்டுள்ளது.