பிரான்ஸ் நாட்டின் கலை என்னும் கடல்கரையில், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் கூடாரங்களை அடித்து தங்கியுள்ளார்கள். அவர்களது ஒரே நோக்கம், எப்படி என்றாலும் பிரித்தானியாவுக்குள் வந்துவிட வேண்டும் என்பது தான். அதற்காக அவர்கள் இறக்கக் கூட தயாராகத் தான் உள்ளார்கள். இன் நிலையில், பிரித்தானியா இவ்வாறு வரும் அகதிகளை ரிவாண்டா நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம்(26) ஒரு அகதிகள் படகு, பிரிட்டன் கடல் கரையை அடைந்துள்ளது.
மேலும் ஒரு படகு பிரான்சில் இருந்து புறப்பட தயாராக இருந்தவேளை. இதனை அறிந்த பிரான்ஸ் பொலிசார் கடல்கரைக்குச் சென்று, தயாராக இருந்த படகை கத்தியால் குத்திக் கிழித்துள்ளார்கள். இதனால் படகு சேதமடைந்து, அதில் இருந்த அகதிகள் அப்படியே கரைக்கு திரும்பி விட்டார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் பொலிசார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக மனித உரிமை, அமைப்புகள் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
Source: https://www.dailymail.co.uk/news/article-13355341/French-police-sink-asylum-seekers-boat-Dunkirk-migrants-Britain-Channel.html