பிரித்தானியாவில் ஜனவரி 2022ம் ஆண்டுக்குப் பின்னர், எவர் எல்லாம் அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்களோ. அவர்கள் அனைவரையும் ரிவாண்டா நாட்டுக்கு நாடு கடத்தும் சட்டம் பிரிட்டன் பாராளுமன்றில் விரைவில் நிறைவேறவுள்ளது. எதிர்கட்சிகளோடு பேசி, பல எதிர்கட்சி முக்கிய பிரமுகர்களை சமாதானப்படுத்திவிட்டார் ரிஷி சுண்ணக். முன்னர் அவரது சொந்தக் கட்சியான மிதவாதக் கட்சியிலேயே இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. தற்போது அதுவும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
இன் நிலையில் விரைவில் இந்த சட்டம் பாராளுமன்றில் அங்கிகரிக்கப்படும். அதன் பின்னர் அதனை எவராலும் தடுக்க முடியாது. எனவே இனி பிரித்தானியாவில் அகதிகள் தஞ்சம் கோரினால். அவர்களை முதல் வேலையாக விமானத்தில் ஏற்றி ரிவாண்டா நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கே ஒரு பெரிய தடுப்பு முகாம் உள்ளது. அங்கே 3 வேளை உணவு கிடைக்கும். அதன் பின்னர். அவர்கள் வழக்கை, பிரித்தானியா உள்துறை அமைச்சு, ஆராயும். அவர்கள் கோரிய அந்தஸ்த்து ஒப்புதல் ஆனால் அவர்கள் பிரித்தானியா வந்து குடியேற அரசு ஏற்பாடுகளை செய்யும்.
அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால், அவர்கள் குறைந்த பட்சம் 6 மாதம் வரை ரிவாண்டா தடுப்பு முகாமில் இருக்க முடியும். பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள். இதுவே தற்போது பிரித்தானிய அரசு எடுத்திருக்கும் மிகக் கடுமையான முடிவு. எனவே ரூரிஸ்ட் விசாவில் வந்து அசேலம் அடிப்பது, ஸ்டுடன்ட் விசாவில் வந்து அசேலம் அடிப்பது எல்லாமே பெரும் சிக்கலில் உள்ளது. அதனை விட பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் வந்து அசேலம் அடிப்பது, என்பது அதனை விட பெரும் சிக்கலாம மாறியுள்ளது.
ஆபிரிக்க நாடான ரிவாண்டாவின் வெப்ப நிலைக்கு, சாதாரண மனிதர்களால் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது. அனல் பறக்கும் வெக்கை காற்றில் இருப்பதை விட சொந்த நாட்டுக்கே ஓடி விடத் தோன்றும். இதனை ஒரு உளவியல் யுத்தமாக மாற்றி இருக்கிறது பிரித்தானிய அரசு.