சில வாரங்களுக்கு முன்னர் தான், இஸ்ரேல் ஒரு படு பயங்கரமான சேஜிக்கல் ஸ்ரைக்(surgical strike) என்று அழைக்கப்படும் ஊடுருவித் தாக்குதல், முறையை பயன்படுத்தி பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது. இஸ்ரேலின் போர் விமானம் ஈரான் நாட்டுக்கு உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு, எப்படி வெற்றிகரமாக திரும்பியது என்பது, தற்போது வெளியாகியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த அன்று, இஸ்ரேல் நாட்டின் ஆளில்லா விமானங்கள் சில ஈரான் நாடு நோக்கிச் சென்றுள்ளது. சுமார் 7 தொடக்கம் 12 ஆளில்லா விமானங்கள் வருவதை ஈரான் அவதானித்த உடனே அவர்கள், வான் கட்டமைப்பு செயல்பட ஆரம்பித்து விட்டது. இந்த ஆளில்லா விமானங்களுக்கு மத்தியில், ஒரு போர் விமானமும் இருந்துள்ளது. இதனை சரியாக கவனிக்க ஈரான் தவறிவிட்டது என்று கூறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த விமானங்கள் 3 குழுவாகப் பிரிந்து 3 இடங்கள் நோக்கி நகர்த்துள்ளது. இதனால் 3 இடங்களில் உள்ள முக்கிய வான் பாதுகாப்பு தளங்களை பாதுகாப்பதில் தான் . ஈரான் குறியாக இருந்தது. ஆனால் இஸ்ரேலின் போர் விமானம் தெகிரான் நோக்கிப் பறந்து சென்று அங்கே உள்ள, தூதுவரலாயத்தை தாக்கியது. இதில் 13 தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இதேவேளை இஷ்வா-கான் என்னும் இடத்தில் அமைந்திருந்த வான் எதிர்ப்பு தளத்தை ஒரு ஆளில்லா விமானம் தாக்கி அழித்துள்ளது.
டீ-கொய் என்று அழைக்கப்படும் ஏமாற்று வேலை அல்லது திசை திருப்பும் வேலை ஒன்றையே இஸ்ரேல் வெற்றிகரமாகச் செய்துள்ளது என்று தான் கூறவேண்டும். இஸ்ரேலின் பல ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இருப்பினும் இழப்பு ஈராணுக்குத் தான். ஈரான் நாட்டில் உள்ள மிக முக்கியமான 4 வான் எதிர்ப்பு தளங்களில் ஒன்றான இஷ்வா-கான் தளம் தகர்ந்துள்ளதாக தற்போது இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் வான் படை விமானம், ரம்பேஜ் (Rampage’ air-to-surface missiles) அதி நவீன ஏவுகணைகளை பாவித்துள்ளதாக தற்போ தகவல்கள் கசிந்துள்ளது.