ஈரான் முன்னெப்பொழுது இல்லாதவாறு, தனது படைகளைப் பெருக்க ஆரம்பித்துள்ளது. அதுபோக அதி சக்திவாய்ந்த அணு குண்டை தயாரிக்க அது திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு ரஷ்யா தொழில் நுட்ப்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்புகள் உள்ளதாக மற்றுமொரு சி.ஐ.ஏ தகவல் தெரிவிக்கிறது. டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதுவராலயம் மீது , சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் விமானப் படை பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தியது.
அதில் சுமார் 13 ஈரான் ராணுவத் தளபதிகள் கொத்தாக கொல்லப்பட்டார்கள். இதனை அடுத்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தற்போது மின் காந்த அலையை தோற்றுவிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி, இஸ்ரேலின் இருப்பு வளையத்தை செயல் இழக்கச் செய்து. பின்னர் தாக்குதல் நடத்தும் திட்டத்தை ஈரான் தீட்டி வருவதாக, அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
இன் நிலையில் ஈரான் நாட்டில் பல இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்து வருகிறார்கள். அவர்களில் பலர் பொதுவெளிகளில் இஸ்ரேல் நாட்டை தாம் நிச்சயம் அழிப்போம் என்று காட்டமாக கூறிவருகிறார்கள். இந்த வீடியோக்கள் சோஷல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.