தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் தான் ரேஷ்மா பசுபலேடி. இவர் தனது வாழ்வில் நடந்த மிக மோசமான விஷயங்களை குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அந்த பேட்டியில் நான் எனது அப்பா அம்மா பார்த்து வைத்த பெண்ணை முதல் முறையாக திருமணம் செய்து கொண்டேன். அதுதான் என் முதல் திருமணம். ஆனால் அவருடன் எனக்கு சில மாதங்களிலே விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு நான் அமெரிக்காவில் இருக்கும் பாக்ஸர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் அவர் பல பெண்களுடன் உறவு வைத்திருந்தது எனக்கு தெரியவந்தது. அதை நான் எதிர்த்து கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு என்னை பயங்கரமாக ஒருமுறை அவர் அடித்துவிட்டார். அப்போது நான் ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருக்கிறேன். அந்த நேரத்தில் கடுமையான வயிற்றுவலி எனக்கு ஏற்பட்டது. அவரிடம் உதவி கூட எனக்கு கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நான் மட்டும் தனியாக கார் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அங்கு அட்மிட் ஆகி பார்த்தபோது எனக்கு உடனடியாக குழந்தை பிறந்து விட்டது.
அதன் பிறகு அந்த குழந்தை கிட்டத்தட்ட நான்கு மாதம் இங்க்பெட்டரில் வைத்திருந்தார்கள். உயிர் பிழைப்பானா இறந்து விடுவானோ என்ற பயத்திலே அந்த நாலு மாதமும் சென்றது. பின்னர் எப்படியோ அவனைக் காப்பாற்றி விட்டேன் .அதன் பிறகு என் கணவரை விவாகரத்து செய்துவிட்டு நான் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வந்துவிட்டேன். இந்தியா வந்ததும் என் மகனுக்கு தினமும் பிசியோதெரபி செய்ய வேண்டும், மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது.
அந்த சமயத்தில் நான் இரண்டு மூன்று கம்பெனிகளில் வேலை பார்த்தேன். சாப்பிடுவதற்கு கூட என்னிடம் நேரமே இருக்காது. எப்படியோ காப்பாற்றி என் மகனை ஒரு வழியாக உயிர் காப்பாற்றி விட்டேன் என்ற ஒரு நிம்மதி எனக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தான் என் வாழ்வில் கொஞ்ம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்து தொடர்ந்து மாடலிங் மற்றும் சீரியல், திரைப்படம் என பிசியாக தற்போது நடித்து ஒரு நல்ல நிலையில் இருக்கின்றேன். வாழ்வில் இவ்வளவு துன்பங்கள் நடந்திருக்கிறது என ரேஷ்மா மிகுந்த வேதனையோடு கூடியிருக்கிறார்.