நடிகர் சிம்பு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பணம் கொடுக்கவேண்டி இருந்தது. முதலில் படம் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சிம்பு அட்வான்ஸ் பணத்தை பெற்றுக் கொண்டு, படம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார் மைக்கேல். இன் நிலையில் அந்த தொகையை செலுத்தும் வரை சிம்பு படம் எதிலும் நடிக்க முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருந்தது. ஆனால்
தற்போது கமல் நடிக்கும் “தக் லைஃப்” படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு கமல் ஹாசனுக்கே 40 நாட்கள் தான் கால் ஷீட் உள்ள நிலையில். சிம்பு 60 நாட்கள் கால் ஷீட் கொடுத்து உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தடை இருக்கும் போது சிம்பு எப்படி மணி ரத்தினம் படமான “தக் லைஃப்” படத்தில் நடிக்கிறார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ள நிலையில்.
சிம்பு மைக்கேலுக்கு பணத்தை செட்டில் பண்ணிவிட்டதாக சில தரப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் மைக்கேலிடம் கேட்டால் சிம்பு இன்னும் தனது பணத்தை தரவில்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.