தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகை வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் படங்களில் அவ்வளவு நேர்த்தியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். பம்பாய் படம் இவவருக்கு மிக முக்கியமாக அமைந்தது. பம்பாய் திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.
நடிகை மனிஷா கொய்ராலா உயிரே, இந்தியன், முதல்வன் ,இப்படி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் . இந்த நிலையை புகழும் உச்சத்திற்கு சென்றதற்கு ஈடாக அவர் சர்ச்சைகளில் சிக்கினார். பேஸ்புக் மூலம் காதலித்து ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை இருவரும் பிரிந்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலாக ஆளாகி குடிபோதைக்கு அடிமையாகி விட்டா.ர் அதனால் அவருக்கு புற்றுநோயும் ஏற்பட்டுவிட்டது நேபாளத்திற்கு சென்று குணமாகி மீண்டு வந்தார். அதன் பின்னர் அவரால் பழைய வாழ்க்கையை திரும்பி வாழ முடியவில்லை.
தற்போது கிட்டத்தட்ட 53 வயதாகும் மனிஷா கொய்ராலா கமலின் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் மனிஷாவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். எனவே மனிஷா கொய்ராலா மற்றும் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.