சமீபத்தில் ஈரான் நாட்டுக்கு உள்ளே நுளைந்த இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியதில், மிக முக்கிய 13 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இன் நிலையில் ஈரான், நேற்றைய தினம்(12) இஸ்ரேல் மீது குரூஸ் மிசைல் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 100 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது ஈரான். இருப்பினும் இஸ்ரேல் வான் கட்டமைப்பானது உலகில் மிக மிக பாதுகாப்பானது. இதனை “”அயன் டோம்”” என்று அழைப்பார்கள்.
இந்த பாதுகாப்பு கட்டமைப்பானது பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளது. ஒரு சில ஏவுகணைகளே தாப்பிச் சென்று இஸ்ரேல் பகுதிக்கு உள்ளே வெடித்துள்ளது. அத்தோடு தற்கொலை ஆளில்லா குண்டு விமானங்கள் சிலவற்றையும் ஈரான் ஏவியுள்ளது. இந்த விமானங்கள், சென்று விழுந்து வெடித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்னும் 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது மேலும் கடுமையான தாக்குதலை ஈரான் தொடுக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இருப்பினும் இஸ்ரேல் தனது பாதுகாப்பு சபையைக் கூட்டி ஆராய்ந்துள்ள நிலையில். இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.