ஜேர்மன் அணி மற்றும் பாசிலோனா அணிக்கு இடையே நடக்கும் உதைபந்தாட்ட போட்டிக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான பொலிஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கிறது. இன்று நடக்கவுள்ள இந்த விளையாட்டுப் போட்டியை, பார்க்க பல்லாயிரக் கணக்கான மக்கள் வர உள்ளார்கள். இந்த நிலையில் ISIS தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டின் முக்கிய பிரிவான, பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார்(BRI) இன்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்கள்.
றோ-போட்டின் வாகனங்கள், கடும் ஆயுதங்கள் வெடிகுண்டுப் பிரிவு, என்று பல பிரிவுகள் களத்தில் இறங்கியுள்ளதோடு ஸ்னைப்பர் அணியும் களத்தில் உள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதனை உறுதிசெய்ய முடியும் என்றும். பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதலை முறியடிக்க முடியும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பின்னர், ஐரோப்பிய நாடுகள் பல அலேட் ஆகியுள்ளது. ஐ.எஸ் அமைப்பு எந்த நேரமும் தமது நாட்டையும் தாக்கலாம் என்ற அச்சம் இருக்கிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிசார் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.