தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக 90ஸ் கட்டத்தில் இருந்து வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் நடித்த பல்வேறு ஹீரோக்களின் திரைப்படங்களில் வில்லன் ரோல்களில் நடித்த மிரட்டி எடுத்தார்.
குறிப்பாக கேப்டன் விஜயகாந்த்தின் பெரும்பாலான திரைப்படங்களில் மன்சூர் அலிகான் வில்லன் ரோல்கள் ஏற்று நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். முதன் முதலில் ஆர்கே செல்வமணி இலக்கிய கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் வில்லனாக அறிமுகமானார். அந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அவரது நடிப்பை பாராட்டத்தக்க வகையில் அமையச் செய்தது.
இதனிடையே சர்ச்சைக்குரிய வகையில் ஏதேனும் கருத்துக்களை பேசி விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கமாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட த்ரிஷாவை குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மன்சூர் அலிகானின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து இணையத்தில் வைரல் ஆக்கியுள்ளனர்.