தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் சிம்புவுக்கு ஜோடியாக போடாபோடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்புவுடன் ஜோடி போட்டு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அப்படத்தில் வரலட்சுமியின் நடனம், நடிப்பு உள்ளிட்டவரை ஒரு அறிமுக நடிகை என்பதே நம்பமுடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாக பிரம்மிக்க வைத்தது.
முதல் படத்திலே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சண்டக்கோழி, கொன்றால் பாவம், மாரி 2, சர்க்கார், விக்ரம் வேதா, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தரை தப்பட்டை திரைப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லலாம். அவரது திறமையான நடிப்பின் மூலம் தொடர்ந்து கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இதனிடையே வரலட்சுமி நடிகர் விஷாலை காதலித்தார். ஆனால், விஷால் திருமணம் செய்துக்கொள்ளாமல் தொடர்ந்து காலம் தாழ்த்திக்கொண்டு சென்றதால் அவரை பிரிந்துவிட்டார். சில ஆண்டுகள் கழித்து தற்போது வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கேலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால், பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்ற மாடல் அழகியை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டாராம். இந்த தம்பதியருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறார்.
அதெல்லாம் விமர்சிக்கப்பட்டாலும் வரலட்சுமி அதை காதில் கூட போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த விஷயத்தில் கவனத்தை செலுத்தி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி தான் பெற்ற செல்ல குழந்தைகள் போல தனது நாய்க்குட்டிகளை பார்த்து வருகிறார்.
அந்த வகையில் தனது செல்லப் பிராணிகளான நாய்களின் பிறந்தநாளை தனது வருங்கால கணவருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் .அதன் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அது சமூக வலைத்தளங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. செல்ல பிராணியை தன் சொந்த மகன்களாக கருதும் நடிகை வரலட்சுமி இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.