தென்னாபிரிக்காவில் பல சவக்காலைகளை, ராணுவம் தனது பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இனம் தெரியாத நபர்கள், சவக்காலையில் உள்ள பல பிணங்களை தோண்டி எடுத்தார்கள். அந்தப் பிணங்கள் மாயமாக மறைய ஆரம்பித்தது. இதனால் தென்னாபிரிக்காவே அதிர்ச்சியடைந்தது. பின்னர் தான் பொலிசார் ஒரு விடையத்தை கண்டு பிடித்தார்கள். அது என்னவென்றால், இறந்த மனிதர்களின் எலும்பை எடுத்து.
அதனை பொடியாக்கி, அதனை ஒரு போதை வஸ்தோடு கலக்கிறார்கள். பின்னர் அதனை சிகரெட் புகைப்பது போல புகைக்கிறார்கள். இடக்னால் கிக் பல மடங்கு ஏறுவதாக செய்தி, காட்டுத் தீ போல பரவியது. இதனை அடுத்து போதைவஸ்த்துக்கு அடிமையான பல்லாயிரம் பேர் இதனை புகைக்க ஆரம்பித்து. இது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. இதனால் பிணங்களுக்கு கிராக்கி ஏற்படவே. ஒரு கும்பல் பிணங்களை தோண்டி எடுத்து விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதித்து வருகிறது.
இதனை தடுத்து நிறுத்தவே ராணுவம் சவக்காலைகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள். இறந்த பிணங்களை புதைத்து, அவர்கள் சாந்தியோடு நிம்மதியாக அங்கே இருக்கட்டும் என்று விட்டால். இந்த போதைவஸ்த்து கும்பல் இறந்தவர்களை கூட நிம்மதியாக இருக்க விட்டுவைக்கவில்லை. என்ன கொடுமை சரவணா ?
Source: https://www.dailymail.co.uk/news/article-13278719/kush-zombie-drug-Sierra-Leone-police-cemeteries-human-bones.html