திறமையால் மட்டுமே தமிழ் சினிமாவில் முன்னுக்கு வந்த நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ஜெய். இவர் 2002 ஆம் ஆண்டு பகவதி திரைப்படத்தில் குணா என்ற ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 28, சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, வலியவன், மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இவர் ஜெயின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும் ,ராஜா ராணி ,இந்த படங்கள் வெளியான பிறகு ஜெய்யின் ரேஞ்சே வேற லெவலில் பீக்கில் சென்றது என்றே சொல்லலாம். ஆனால், அதற்குள் அவர் கெரியர் காலி ஆகிவிட்டது. என்ன ஆனது என தெரியாமல் குழம்பிப்போன ரசிகர்கள் ஜெயிக்கு என்னதான் ஆனது என கேள்வி எழுப்பி வந்தனர்.
அவர் சறுக்கியதற்கு முக்கிய காரணம் காதல் தான் என கூறப்படுகிறது. ஆம் ஜெய் பிரபல நடிகை அஞ்சலியுடன் காதலிலிருந்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்து அதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டு பின்னர் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டார்.
அதன் பின்னர் காதல் காதலும் தோல்வி அடைய நயன்தாரா மற்றும் ஷங்கரின் உதவி இயக்குனர் என நம்பி அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து ராஜா ராணி ரேஞ்சுக்கு பேசப்படலாம் என நம்பிய ஜெயிக்க ஏமாற்றமே மிஞ்சியது அடுத்ததாக தற்போது அறம் கோபி நயனார் இயக்கத்தில் கறுப்பர் கூட்டம் என்ற படத்தில் ஜெய் நடித்துள்ளார். அந்த படம் மட்டும் வெளியானால் நிச்சயம் ஜெய்க்கு வேற லெவல் ஸ்கோப் கிடைக்க இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.