நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் கார் ரேஸிங் காட்சியில் நடித்தபோது பயங்கர விபத்துக்குள்ளாகி நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பேரதிர்ச்சியை கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிர்ந்துப்போய்விட்டார்கள்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித் நடித்து வந்தார். படத்தின் ஷூட்டிங் அர்பஜனில் இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை எடுப்பதற்கான ஃபண்ட் எங்களிடம் இல்லை இந்திய 2 மற்றும் வேட்டையன் படத்தை எடுத்து முடித்துவிட்டு அது ரிலீஸ் ஆனதும் விடாமுயற்சி படத்தை எடுக்கலாம் என அஜித்திடம் கூறினார்களாம்.
இதனை கேட்டு கடுங்கோபத்திற்கு ஆளான அஜித்… அப்போ என் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ரஜினி, கமல் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்களா? என கேட்டு ஜூன் மாதத்திற்கு படப்பிடிப்பை முடித்தாகவேண்டும் என கண்டீஷன் போட்டாராம். அப்பவும் செவி சாய்க்கவில்லையாம் லைகா நிறுவனம்.
அந்த கோபத்தின் வெளிப்பாடாக தான் அஜித் லைக்கா நிறுவனத்தை மிரட்டும் தொனியில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் footage’ யை தனது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கூறி வெளியிட சொன்னாராம். இதனால் லைக்கா நிறுவனத்திற்கும் அஜித்திருக்கும் இடையில் சைலண்டாக மிகப்பெரிய போர் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகிறது.