இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழர்களின் பொது வேட்ப்பாளராக ஒருவரை நிறுத்துவது என்று சில தமிழர் தரப்பு முடிவுசெய்துள்ளது. இலங்கை முறைமைப்படி, எந்த ஒரு தமிழரும் இலங்கை ஜனாதிபதி ஆகிவிட முடியாது. இருப்பினும் வழமையாக தமிழர் தரப்பு ஒரு பொது வேட்ப்பாளரை நிறுத்தி, அவருக்கு அனைத்துத் தமிழர்களும் வாக்களிப்பது ஒரு நடைமுறையாக இருந்துவரும் நிலையில்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில், நீதிபதி இளம்செழியனை பொது வேட்ப்பாளராக அறிவிப்பது என்று சில தரப்பினர் முடிவெடுத்துள்ளதாக அதிர்வு இணையதிற்கு செய்திகள் கசிந்துள்ளது. கடந்த முறை அதற்கு முதன் முறை என்று பல தடவைகள் சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதி வேட்ப்பாளராக போட்டியிட்டு வந்தார். ஆனால் அவர் தற்போது உடல் நலக்குறைவில் உள்ளார். இதன் காரணத்தால் அவரால் இம் முறை போட்டியிட முடியாது.
எனவே நீதிபதி இளம்செழியனை களம் இறக்குவது என்று சில தமிழர் தரப்பு முடிவெடுத்துள்ளதோடு, இம் மாதம் திருகோணமலையில் இதற்கான கூட்டத்தையும் கூட்ட உள்ளார்கள்.
தமிழ் கட்சிகள், தமிழ் தேசியத்திற்கான முன்னணி போன்ற கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறதா ? இல்லையா என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதனையும் இதுவரை அக் கட்சிகள் தெளிவுபடுத்தவும் இல்லை என்பது , சந்தேகங்களை கிளப்பியுள்ளது.