தாம்பரம் அருகே ஒரு தொழில்நுட்ப்பவியலாளரான பெண்ணை, எரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக முன் நாள் காதலனை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். சென்னை தாழம்பூர் அருகே பொன்மார் பகுதியில் ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் சொல்ல விரைந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள். அந்தப் பெண்ணின் கைகள் மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், அவரை யாரோ எரித்துக் கொலை செய்துள்ள விடையத்தை பொலிசார் கண்டு பிடிக்க, பெரும் விசாரணை முடிக்கிவிடப்பட்டது.
அப்போது அந்த சடலத்தின் அருகே கைபேசி இருந்தது. உடனே அதை கைப்பற்றிய போலீஸார் அதிலிருந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெண் இறந்தது குறித்து தெரிவித்தனர். அவர் பெருங்குடியில் பணியாற்றி வருவது தெரியவந்தது. இவர் மதுரை தல்லாங்குளத்தை சேர்ந்த 28 வயது நந்தினி என தெரியவந்தது. மேலும் அவர் உடலுக்கு அருகே இந்த செல்போனில் அவர் யாருடன் கடைசியாகப் பேசினார் என்ற விடையத்தை துப்புத் துலக்கிய பொலிசார், அவர் ஒரு இளைஞரோடு தொடர்பில் இருந்ததை கண்டு பிடித்துள்ளார்கள்.
இன் நிலையில் பொலிசார் அந்த இளைஞனை தேடிவந்த நிலையில், நந்தினியின் முன் நாள் காதலன் வெற்றி என்பவனே நந்தினியைக் கொலை செய்துள்ளான் என்பதனை பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். நந்தினியை சமயம் பார்த்து கொலை செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்ட வேற்றி, நேற்றைய தினம் அவர் பிறந்த நாள் என்பதனால் அவரை, வெளியே அழைத்துச் சென்றுள்ளார் பின்னர் பிறந்த நாள் பரிசு தருவதாகவும் கூறியுள்ளார். கேளம்பாக்கம் அருகே நந்தினியை சங்கிலியால் கை, கால்களை கட்டி அவரது கழுத்தை அறுத்துக் கொன்று பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார் என பொலிசார் விசாரணையில் கண்டறிந்துள்ளார்கள். இந்த நூற்றாண்டில் கூட இவர்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பது, மிகவும் ஆச்சரியமான விடையம் தான் !