DPD வேன் ஓட்டுனரான ஆர்மான் சிங் என்ற 23 வயது இந்தியரை, 4 இந்தியர்கள் பிரிட்டனில் பட்டப் பகலில் கொலைசெய்துள்ளார்கள். இந்த 4ல்வர் கைகளில், கோடலி, கொல்ஃப் அடிக்க பாவிக்கப்படும் பேட், என்று படு பயங்கரமான ஆயுதங்கள் இருந்துள்ளது. சம்பவ தினம் அன்று, ஆர்மான் சிங், தனது நண்பரோடு DPD வேனை ஓட்டிச் சென்றுள்ளார். அவரது நண்பரின் வீட்டுக்கு முன்னால் வைத்து, இடைமறித்த குறித்த 4 இந்தியர்கள்(அவர்களும் சீக்கியர்கள் தான்).
நடந்தது என்ன ?
ஆர்மான் சிங்கை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்கள். இதனைப் பார்த்த நண்பர் தப்பி ஓடி பொலிசாருக்கு அழைப்பை விடுத்துள்ளார். DPD அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றும் ஒரு சீக்கிய நபர், இவர்கள் வேனில் பல விலை உயர்ந்த ஐ-போன்கள் உள்ளது என்று தகவல் கொடுத்துள்ளார். டிலிவரி செய்ய முன்னரே இதனை கொள்ளையடிக்க இந்த 4 சீக்கியரும் திட்டம் போட்டு இருக்கிறார்கள். இருப்பினும் இவர்கள் தாக்கிய விதம், ஆர்மான் சிங் இறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டார்.
இதனால் பதற்றம் அடைந்த இந்த 4 சீக்கியர்களும், உடனடியாக தமது அவுடி காரில் ஏறி தப்பிச் சென்று, அருகே உள்ள குப்பை போடும் BINல் தமது ஆயுதங்களை போட்டுள்ளார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. ஆனால் பொலிசார் அந்த இடம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினார்கள். இறுதியாக, வீடு வீடாகச் சென்று, வீட்டு வாசலில் உள்ள சிறிய CCTV கமராக்களின் பதிவைப் பார்த்தார்கள் பொலிசார்.
கடைசியாக இந்த 4 பேரும் சென்று ரத்தம் படிந்த அந்த ஆயுதங்களை BINல் போடுவதை பொலிசார் கண்டு பிடித்து அவர்கள் அனைவரையும் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இப்படி DPD அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்களே தங்கள் சக வேலை ஆட்களை காட்டிக் கொடுப்பது என்பது, மிகவும் கேவலமான விடையம். ஐ-போனை திருடுவதற்காக கொலைசெய்யும் அளவுக்கு செல்கிறார்கள் பிரித்தானியர்கள். இவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.