சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமல் இருவருமே எதிரெதிராக போட்டி போட்டு படத்தில் நடித்து ஒரே நாளில் படங்களை ரிலீஸ் செய்து இரண்டு ரசிகர்களும் அடித்துக்கொள்ளும் அளவிற்கு திரைத்துறையில் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இவர்களது திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த சினிமாவையே அதிர வைக்கும். அப்படி ரஜினி கமல் இருவருக்கும் மனதுக்குள்ளேயே ஒரு விதமான போட்டி நிலவில் வந்ததாக கூறப்படுகிறது. இருவரில் சிறந்த நடிகர் யார் என்பதை ஒவ்வொரு முறையும் மக்களுக்கு தெரிவுபடுத்த அவ்வளவு மெனக்கட்டு நடிப்பார்களாம்.
வாரி கொடுக்கும் வாய்ப்பு… பூர்ணிமாவுக்கு வாழ்க்கை கொடுத்த பிக்பாஸ் !
அப்படித்தானே ரஜினி ஒருமுறை கமலின் நாயகன் படத்தை பார்த்து மிரண்டுபோனாராம். ஆம், 1987-ம் ஆண்டு ரஜினியின் மனிதன் படமும், கமலின் நாயகன் படமும் ஒரே நாளில் வெளியானது. அப்போது நயகன் படத்தை பார்த்துவிட்டு ரஜினி, நண்பரும் எழுத்தாளருமான பஞ்சு அருணாச்சலத்திற்கு போன் செய்து…
அண்னே நாயகன் படம் பார்த்துட்டு வந்தேன். படத்தை அப்படி பண்ணிருக்காங்க. நம்ம படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுது. ஆடியன்ஸுக்கு எப்படி இருக்கும் என்று டென்ஷனாக கேட்டாராம். அதற்கு பஞ்சு அருணாச்சலம், “ சார். நீங்க நடிச்ச மனிதன் படம் பக்கா கமர்ஷியல். அது வேற. நாயகன் படத்தை நானும் பார்த்தேன்.. அது வேற மாதிரி.. ரெண்டுமே ஓடும் சார். அது ஒரு மாதிரி ஓடும். இது வேற மாதிரி ஓடும்” என்று கூறினாராம்.
உடனே ரஜினிகாந்த் நீங்க சொன்ன மாதிரி ரெண்டு படமும் சமமா வசூல் பண்ணுச்சுன்னா உங்களுக்கு ஒரு கால்ஷீட் தரேன்னு சொன்னாராம். பின்னர் நாயகன், மனிதர் இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஒரே மாதிரியான வசூலை ஈட்டியது. அதன் பின்னர் ரஜினி தான் வாக்கு கொடுத்தது போலவே பஞ்சு அருணாச்சலத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்த படம் தான் குரு சிஷ்யன்.