பிரித்தானியாவின் வாக்காளர் பட்டியலை, சீன ஹக்கர்கள் ஹக் செய்துள்ளார்கள் என்பதனை உத்தியோக பூர்வமாக பிரித்தானிய அரசு அறிவிக்க உள்ளது. பிரித்தானியாவில் உள்ள சுமார் 40 மில்லியன் நபர்களின் விபரங்களை சீன ஹக்கர்கள், எடுத்துள்ளதாகவும். இது மிகப் பெரிய ஊடறுப்பு நடவடிக்கை என்றும் பிரித்தானிய MPக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது கடந்த 2021ம் ஆண்டு நடந்தது என்றும். அன்று முதல் இன்றுவரை நடைபெற்ற விசாரணையின் பின்னர், இது சீன ஹக்கர்களால் செய்யப்பட்ட நாசகார வேலை என்பது தெளிவாகியுள்ளது என்றும் அமைச்சர்கள் மற்றும் MPக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை அடுத்து பிரித்தானிய அரசு உத்தியோக பூர்வமாக இதனை அறிவிக்க உள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. உலக அரங்கில் இவ்வாறான ஒரு பழியை பிரித்தானியா நேரடியாக சீனா மீது சுமத்த உள்ளது.